/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
/
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED : மே 06, 2024 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.