ADDED : மே 06, 2024 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, மாலை 4:30 மணிக்கு மேல் 12 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. அருகம்புல், வில்வ மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, மூலவர் சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால், தயிர் உள்ளிட்ட அபிேஷக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்தினர்.