/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
/
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
ADDED : செப் 05, 2024 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் இதற்காக நேரடியாக ஆய்வு செய்து பணியாளர்களை ஊக்குவித்து வருகிறார்.திருக்கண்டேஸ்வரம் பகுதியில் கமிஷனர் கிருஷ்ணராஜன் வீடுவீடாக டெங்கு பணியாளர்களை அழைத்து சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்தார்.வீட்டின் உரிமையாளர்களிடமும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.