/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பின்னலுாரில் முதல்வர் திட்ட முகாம்
/
பின்னலுாரில் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 04, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே பின்னலுார் அரசு உயர் நிலைப்பள்ளியில் வரும் 7 ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் மேல்புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த அம்பாள்புரம், பிரசன்னராமாபுரம், மஞ்சக்கொல்லை, வடதலைக்குளம் மற்றும் உளுத்தூர் கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து நேரில் மனு அளிக்கலாம். மின்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, வீட்டு வசதி, போலீஸ், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெறுகின்றனர்.