ADDED : மார் 02, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான பிரிண்டர் வழங்கல், பெண் கல்வி முக்கியத்துவம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
ரோட்டரி கிளப் சங்கமம் தலைவர் நாராயணசாமி பிரிண்டர் வழங்கினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், குழந்தைகளுக்கான பாதுகாப்பு உதவி எண் 1098, இணையவழி குற்ற பாதுகாப்பு எண் 1930 குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ரோட்டரி கிளப் செயலாளர் கார்த்திசன், பொருளாளர் ஞானசேகரன், உமாசுதன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் அனு நன்றி கூறினார்.