/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கைதி பிறந்த நாள் கொண்டாட்டம் மேலும் ஒரு போலீஸ் 'சஸ்பெண்ட்'
/
கைதி பிறந்த நாள் கொண்டாட்டம் மேலும் ஒரு போலீஸ் 'சஸ்பெண்ட்'
கைதி பிறந்த நாள் கொண்டாட்டம் மேலும் ஒரு போலீஸ் 'சஸ்பெண்ட்'
கைதி பிறந்த நாள் கொண்டாட்டம் மேலும் ஒரு போலீஸ் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 05, 2024 10:21 PM
கடலுார்:கடலுார் அடுத்த பில்லாலி தொட்டியைச் சேர்ந்த சூர்யா, 26, எய்தனுார் விக்னேஷ், 26, ஆகிய இருவரையும், கடந்த மாதம் 25ம் தேதி, தி.மு.க., பிரமுகரை கத்தியால் வெட்டிய வழக்கில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர். சூர்யா தப்பியோட முயன்ற போது, கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு, கடலுார் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சூர்யா கடந்த 1ம் தேதி தன் பிறந்த நாளை மருத்துவமனையில், தன் மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிறை காவலில் உள்ள நபர், எவ்வித அச்சமும் இன்றி, மருத்துவமனையில் பிறந்த நாளை கொண்டாடியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸ்காரர் சாந்தகுமார், ஆயுதப்படை போலீஸ்காரர் வேல்முருகன் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி.,ராஜாராம் உத்தரவிட்டார். இந்நிலையில் மேலும் ஒரு ஆயுதப்படை போலீஸ்காரரான கவியரசன் என்பவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.