ADDED : ஜூலை 24, 2026 08:22 PM
திட்டக்குடி, ஜூலை 25–
திட்டக்குடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார்; மின்வாரிய ஊழியர். இவரது மனைவி தமிழ்கனி, 32; தனியார் பள்ளி ஆசிரியை. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள், 1 மகன் உள்ளனர். தமிழ்கனி தினமும் அவரது தாய் மாலினிக்கு மொபைல் போனில், பேசி வந்தார். கடந்த சில தினங்களாக, சரிவர பேசவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் மகள் தமிழ்கனி இறந்து விட்டதாக மருமகன் சரத்குமார் தெரிவித்தார். தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, தமிழ்கனி தாய் மாலினி கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
