ADDED : மே 21, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் பன்னிரு ஆழ்வார்கள் பற்றி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.
கடலுார், திருவந்திபுரத்தில் நடந்த போட்டியை சங்க மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பன்னிரு ஆழ்வார்களின் இறை பக்தி குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் விஜயராகவன், பன்னிரு ஆழ்வார்கள் பற்றி பேசினார். உறுப்பினர் ரங்கநாதன் வாழ்த்தி பேசினார். மாணவி ஜனனி பார்கவி நன்றி கூறினார்.
