/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு
/
தமிழில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 08, 2024 06:17 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை சார்பில், நற்றமிழ் நல்லாசிரியர் விருது வழங்கல் மற்றும் நிறுவனர் நாள் கொண்டாடப்பட்டது.
கவுரி கிரீஷ் குழுவினரின் திருமுறை இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அறக்கட்டளை செயலாளர் அருள்மொழிச்செல்வம் வரவேற்றார்.குருஞானசம்பந்தம்பள்ளிதலைவர் சேதுசுப்ரமணியம் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்சிவச்சந்திரன், கேடில் விழுச்செல்வம் என்ற தலைப்பில் உரையாற்றினார். கரந்தை ஏகாந்தம் துரைக்கண்ணன்,நல்லாசிரியர் சுவாமிநாதன், பழனிசாமிநாதன் ஆகியோரின் பணிகள் நினைவு கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரின் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்களுக்கு நற்றமிழ் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
விழாவில் டாக்டர் பிருந்தா அருள்மொழிச்செல்வன், ராகவன் பொன்னம்பலம் மற்றும் நகர பிரமுகர்கள் பங்கேற்றனர்.