தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளிக்கு திட்ட உதவிகள்; எம்.எல்.ஏ., வழங்கல்

பள்ளிக்கு திட்ட உதவிகள்; எம்.எல்.ஏ., வழங்கல்

பள்ளிக்கு திட்ட உதவிகள்; எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : செப் 06, 2024 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2024 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் துறைமுகம், புனித பிலோமினாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

பங்குத் தந்தை பாஸ்கல்ராஜ்,தலைமை ஆசிரியை அல்போன்சா, பிலோமினாள் பெண்கள் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா மேரி முன்னிலை வகித்தனர்.விழாவில்,அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகர கவுன்சிலர் கீர்த்தனா ஆறுமுகம், நிர்வாகி செந்தில்நாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us