/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.என்.பாளையத்தில் ரூ.17 கோடியில் திட்டங்கள்
/
சி.என்.பாளையத்தில் ரூ.17 கோடியில் திட்டங்கள்
ADDED : பிப் 23, 2025 05:36 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.16 கோடியே 13 லட்சம் மதிப்பில் பலா மதிப்பு கூட்டு மையம் அமைக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் கடலுாரில் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து சி.என்.பாளையம் பட்டீஸ் வரத்தில் பலா மதிப்பு கூட்டு மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தனர்.
அதேபோல் நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சித்த மருத்துவ பிரிவு கட்டடம், சி.என்.பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கட்டப்பட்ட ரூ.59 லட்சம் மதிப்பிலான கட்டங்களை முதல்வர் கடலுாரில் துவக்கி வைத்தார்.