/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகராட்சியில் சொத்துவரி சிறப்பு முகாம்
/
கடலுார் மாநகராட்சியில் சொத்துவரி சிறப்பு முகாம்
ADDED : ஆக 04, 2024 12:36 AM

கடலுார்: செல்லங்குப்பம், வண்ணாரப்பாளையத்தில் நடந்த மாநகராட்சி சொத்து வரி வசூல் சிறப்பு முகாமில் 62 வரி விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
கடலுார் மாநகராட்சியில் புதிய சொத்துவரி வசூல் சிறப்பு முகாம், கடலுார் முதுநகர் செல்லங்குப்பம் சிவானந்தபுரம் காமாட்சி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு புதிய கமிஷனர் அனு தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்று சொத்துவரி குறித்த விண்ணப்பங்கள் பெற்றனர்.
சிவானந்தபுரம் முகாமில் வரி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து, 48 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வண்ணாரப்பாயைம் பாடலீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த முகாமில், 14 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட 62 விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் அனு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் சரத் தினகரன், வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.