/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செழிப்பாக வளரும் மணிலா: விவசாயிகள் மகிழ்ச்சி
/
செழிப்பாக வளரும் மணிலா: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 14, 2024 11:21 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள வேர்க்கடலை செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த ஆலடி, ப.எடக்குப்பம், பழையபட்டிணம், வீராரெட்டிக்குப்பம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் மானாவாரியாக வேர்க்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.
அதேபோல், நடப்பாண்டு பெய்த பருவமழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்தனர்.
இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்ட வேர்க்கடலை செடிகள் தற்போது நன்கு செழித்து வளர்ந்துள்ளது.
இதனால், வேர்க்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.