/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கல்
ADDED : ஜூலை 29, 2024 04:45 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலகு மற்றும் மாவட்ட எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோர் சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் செல்வம்,மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோர் சங்க செயலர் சிவசீலன் வரவேற்றார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 150 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கினார்.
இதில், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோர் சங்க தலைவர் ராஜேஸ்வரி, மருத்துவர் அய்யப்பன், நம்பிக்கை மைய ஆலோசகர் தங்கமணி உட்பட பலர் பங்கேற்றனர்.