/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பங்காரு அடிகளார் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ADDED : மார் 04, 2025 07:01 AM

கிள்ளை; சிதம்பரம் முத்தையாநகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளாரின் 85 வது அவதார திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளாரின் 85 வது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் முத்தையாநகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று ரூ. 60 ஆயிரம் மதிப்பில், துாய்மைப்பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, அண்ணாமலை பல்கலைக்கழக கால்நடை பண்ணைக்கு தீவனம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டடவியல் துறை நில அளவை ஆய்வு கூடத்திற்கு, நில அளவைக் கருவிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் கிருபானந்தன் தலைமை தாங்கினார். சக்தி பீட தலைவர் கோபு, பேராசிரியர்கள் ஞானகுமார், பாலகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துாய்மை பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டடவியல் துறை முன்னாள் துறை தலைவர் பூங்கோதை வழங்கினார்.
விழாவில், அண்ணாமலை பல்கலைக்கழக பிரிவு அலுவலர் மகேஷ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.