/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்
/
பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்
ADDED : ஆக 31, 2024 03:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
தலைமையாசிரியர் பூங்கொடி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
சேர்மன் ஜெயந்தி மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். குறுவட்ட அளவிலான செஸ், சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி, பரிசு வழங்கினார்.
துணைத் தலைவர் கிரிஜா, தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், துணை செயலாளர் பார்த்தசாரதி, தொழில்நுட்ப அணி அருள், கவுன்சிலர் ஆனந்தராஜ், வி.சி., நகர செயலாளர் திருமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.