தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கல் 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கல் 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கல் 


ADDED : மே 14, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது. 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு கடந்த 8ம் தேதி வெளியானது. பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி சேர்க்கைக்கு உடனடியாக விண்ணப்பிக்கும் வகையில் அவரவர் பயின்ற பள்ளிகளில் கடந்த 13ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. 

கடலுார் மாவட்டத்தில் 248 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 28,518 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள், அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து, மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us