/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விற்பனை முகவராக பி.எஸ்.என்.எல்., அழைப்பு
/
விற்பனை முகவராக பி.எஸ்.என்.எல்., அழைப்பு
ADDED : செப் 04, 2024 03:32 AM
கடலுார் : கடலுார் மாவட்ட பி.எஸ்.என்.எல்.,ல் விற்பனை முவராக இணையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் மாவட்ட பி.எஸ்.என்.எல்.,பொது மேலாளர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிதம்பரம், கடலுார் பகுதிகளில் 4ஜி சேவைக்கான கட்டமைப்பு பணிகள் துவங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. 4ஜி சேவை பெற தற்போது பி.எஸ்.என்.எல்., 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையம், சிறப்பு மேளா நடைபெறும் இடங்கள் மற்றும் சில்லரை விற்பனை செய்யும் கடைகளில் சென்று 4ஜி சிம் கார்டுகளாக இலவசமாக மாற்றலாம்.
2ஜி மற்றும் 3ஜி சிம்மிலிருந்து 4ஜி சிம்மாக மாற்றிக் கொள்ளும் நபர்களுக்கு 4 ஜி.பி. டேட்டா இலவசம். கடலுார் நகர பகுதி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் மொபைல் போன்,சிம் கார்டுகள், ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் அதில் தொடர்புடைய சேவைகளில் விற்பனையை மேம்படுத்தும் வகையில் மொபைல் பிரான்சைசிகளை (விற்பனை முகவர்கள்) பி.எஸ்.என்.எல்.,ல் நியமிக்கப்பட உள்ளனர்.
கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை படிப்படியாக வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 12ம் தேதி ஆகும். மேலும், விவரங்களுக்கு www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.