/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சத்திரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்
/
புதுச்சத்திரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்
ADDED : மே 30, 2024 05:39 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பகுதி கிராமங்களில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
புதுச்சத்திரம் அருகே பூவாலை உள்ளிட்ட சுற்றுபுற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள், வீட்டு தோட்டத்தில் உள்ள தென்னை், கொய்யா, நெல்லி, வாழை மரங்களில் உள்ள காய்களை பறித்து சேதப்படுத்தி வருகின்றன.
மேலும் வீட்டின் உள்ளே புகுந்து உணவு பண்டங்களை தின்றும், கீழேகொட்டியும் சேதப்படுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் விரட்டுவோர் மீது, குரங்குகள் கடிக்க பாய்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.