/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சேரி மது கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது
/
புதுச்சேரி மது கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது
ADDED : ஜூன் 22, 2024 04:40 AM

கடலுார் : பைக்கில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் ஆல்பேட்டை சோதனைசாவடியில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தபோது, புதுச்சேரி மாநில 25 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், மதுபாட்டில் கடத்தியது கடலுார் அடுத்த செல்லங்குப்பத்தை சேர்ந்த தியாகு, 50. என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, பைக்கில் புதுச்சேரி மாநில 30 மதுபாட்டில்களை கடத்தி வந்த செம்மங்குப்பத்தை சேர்ந்த சிவபாலன், 38, என்பவரை போலீசார் கைது செய்தனர்.