/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சேரி ரவுடிக்கு சரமாரி வெட்டு பண்ருட்டி அருகே பரபரப்பு
/
புதுச்சேரி ரவுடிக்கு சரமாரி வெட்டு பண்ருட்டி அருகே பரபரப்பு
புதுச்சேரி ரவுடிக்கு சரமாரி வெட்டு பண்ருட்டி அருகே பரபரப்பு
புதுச்சேரி ரவுடிக்கு சரமாரி வெட்டு பண்ருட்டி அருகே பரபரப்பு
ADDED : மே 16, 2024 02:52 AM

பண்ருட்டி: புதுச்சேரி ரவுடியை பண்ருட்டி அருகே மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனுாரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஜெயபிரகாஷ்,28; பிரபல ரவுடியான இவர் மீது வில்லியனுார் போலீசில் கொலை வழக்கு உள்ளது.
இவர், கடந்த 15 நாட்களாக கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் தனது மாமனார் அய்யனார் வீட்டில் தங்கி, கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை 9:00 மணிக்கு வேலைக்கு மாளிகைமேடு- எம்.புதுப்பாளையம் மெயின்ரோட்டில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு பைக்கில் பின் தொடர்ந்து வந்த 5 பேர், திடீரென ஜெயபிரகாைஷ கத்தியால் சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அந்த கும்பல் தப்பிச் சென்றது.
தலை, கழுத்து பகுதியில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதில், முன்விரோதம் காரணமாக ஜெயபிரகாைஷ கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.