/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை புதுக்குளம் கிராம மக்கள் முற்றுகை
/
ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை புதுக்குளம் கிராம மக்கள் முற்றுகை
ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை புதுக்குளம் கிராம மக்கள் முற்றுகை
ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை புதுக்குளம் கிராம மக்கள் முற்றுகை
ADDED : ஆக 01, 2024 07:06 AM

விருத்தாசலம்: புதுக்குளம் கிராம மக்கள் இலவச மனைப்பட்டா கோரி, விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயாபேரின்பன் தலைமையில் பொது மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களது மனுவில்,
திட்டக்குடி தாலுகா, புதுக்குளம் ஊராட்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையினர் கீழ் கடந்த 1999ம் ஆண்டில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
அதில், 17 குடும்பங்களுக்கு இதுவரை மனைப்பட்டா வழங்கிட அளவீடு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே அரசு வழங்கிய மனைப்பட்டாக்களை உரிய அளவீடு செய்து வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தனி தாசில்தார் வெற்றிவேலிடம் மனு கொடுத்தனர். அப்போது மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.