/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி அருகே முயல் வேட்டை தப்பியோடிய நபர்களுக்கு வலை
/
திட்டக்குடி அருகே முயல் வேட்டை தப்பியோடிய நபர்களுக்கு வலை
திட்டக்குடி அருகே முயல் வேட்டை தப்பியோடிய நபர்களுக்கு வலை
திட்டக்குடி அருகே முயல் வேட்டை தப்பியோடிய நபர்களுக்கு வலை
ADDED : ஜூலை 12, 2024 06:17 AM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலிடமிருந்து, வெடி மருந்து, பால்ரஸ் மற்றும் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடி கும்பலை தேடி வருகின்றனர்.
திட்டக்குடி அடுத்த சிறுமுளை ஏரிக்கரை பகுதியில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நாட்டுத்துப்பாக்கி மூலம் முயல், காட்டுப்பூனைகளை வேட்டையாடினர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வி.ஏ.ஓ.,ராமகிருஷ்ணன் மற்றும் திட்டக்குடி போலீசார் ஏரிக்கரை பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும், வேட்டையாடிய மர்ம நபர்கள் தப்பியோடினர்.
அங்கிருந்த இரண்டு பைக்குகள், துப்பாக்கி மருந்து, பால்ரஸ் மற்றும் வேட்டையாடப்பட்ட இரண்டு முயல், மூன்று காட்டுப்பூனைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறுமுளை கிராம வி.ஏ.ஓ.,ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.