/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 15ம் தேதி ராதா திருக்கல்யாணம்
/
கடலுாரில் 15ம் தேதி ராதா திருக்கல்யாணம்
ADDED : செப் 13, 2024 07:01 AM
கடலுார்: கடலுார் ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா சார்பில் 67வது கிருஷ்ணர், ராதா திருக்கல்யாண உற்சவம் வரும் 15ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி, வரும் 14ம் தேதி காலை 7:00 மணிக்கு பாதுகா அபிேஷகம், 8:30 மணிக்கு தோடய மங்களம் குருகீர்த்தனை, மாலை 4:00 மணி முதல் அஷ்டபதி, தரங்கம், பஞ்சபதி, இரவு 7:30 மணி முதல் 11:00 மணி வரை தியான பூஜை, திவ்யணாமம், டோலோத்ஸசவம் நடக்கிறது.
15ம் தேதி காலை 9:00 மணி முதல் 1:00 வரை ஸ்ரீ ராதா திருக்கல்யாண உற்சவம், ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது. நாகூர் ஸ்ரீ அரவிந்த் ஸ்ரீகாந்த் பாகவதர் மற்றும் குழுவினர், உள்ளூர், வெளியூர் பாகவதர்களின் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை சங்கர பக்த ஜன சபா தலைவர் திருமலை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.