/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம்
/
சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 11, 2024 04:27 AM

சிதம்பரம், : மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, சிதம்பரம் வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகி தலைமையில், சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 12:00 மணியளவில் வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார், வாயிலில் தடுத்து நிறுத்தினர். பின்னர், நடைமேடை சென்ற அவர்கள் கோஷமிட்டுவிட்டு திரும்பினர்.
சங்க செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் பாலகுரு, வழக்கறிஞர்கள் செந்தில்குமார், வேணுபுவனேஸ்வரன், அமுதன், ஆழ்வார், வடிவு காந்தி, குமாஸ்தா சங்கத் தலைவர் பழனிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.