/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆமை வேகத்தில் நடக்கும் ரயில் நிலைய திட்டப் பணிகள்; ரயில் பயணிகள், பொதுமக்கள் அதிருப்தி
/
ஆமை வேகத்தில் நடக்கும் ரயில் நிலைய திட்டப் பணிகள்; ரயில் பயணிகள், பொதுமக்கள் அதிருப்தி
ஆமை வேகத்தில் நடக்கும் ரயில் நிலைய திட்டப் பணிகள்; ரயில் பயணிகள், பொதுமக்கள் அதிருப்தி
ஆமை வேகத்தில் நடக்கும் ரயில் நிலைய திட்டப் பணிகள்; ரயில் பயணிகள், பொதுமக்கள் அதிருப்தி
ADDED : மார் 10, 2025 12:24 AM

கடலுார்; திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் அமிர்த பாரத் திட்டத்தில் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்ட தலைநகரில் உள்ள திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் சென்னை-தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்குடி, ராமேஸ்வரம் இணைக்கும் பிரதான ரயில் பாதையாக உள்ளது.
ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் ரூ.6.3 கோடி மதிப்பில் ரயில் நிலைய நிர்வாக அலுவலகம் புதுப்பித்தல், நடைமேடை மேல் கூரை அமைத்தல், பார்க்கிங் வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை, ரோடு, பூங்கா போன்றவை மேம்படுத்தும் பணிகள் திட்டமிடப்பட்டது.
இந்த பணிகளை கோவையைச் சேர்ந்த நிறுவனம் ஒப்பந்தம் பெற்று, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் பணிகளை துவங்கியது.
பணிகள் துவங்கியது முதல் முறையாக நடக்காமல் காலதாமதத்துடன் நடந்து வருகிறது.
மேலும் சில பணிகள் துவங்கியது முதல் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் பல முறை நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டும், பணிகளில் வேகம் காட்டாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதில் அதிருப்தி அடைந்த அதிகாரி, பணிகளை சரிவர கண்காணிக்கவில்லை என திட்ட பொறுப்பு அதிகாரிகள் மூன்று பேர் அதிரடியாக இடம் மாற்றம் செய்தனர்.
எனவே பயணிகளின் நலன் கருதி பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.