/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரநாராயணபெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி
/
சரநாராயணபெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி
ADDED : மே 13, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு விஸ்வரூபம், 8:00 மணிக்கு நித்யபடி காலை திருவாராதனம், 9:30 மணிக்கு ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடந்தது. 11:30 மணிக்கு ராமானுஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர்.