/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமதாஸ் பிறந்த நாள் விழா நெய்வேலியில் கொண்டாட்டம்
/
ராமதாஸ் பிறந்த நாள் விழா நெய்வேலியில் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:43 PM

கடலுார்: கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில், கட்சி நிறுவனர் ராமதாஸ் 86 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நெய்வேலி நடராஜர் கோவிலில், பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடந்தது. இதில் பா.ம.க., வன்னியர் சங்கம், பசுமை தாயகத்தினர்  பஙகேற்று, பா.ம.க., வின் கொள்கைகள் குறித்த உறுதி மொழியேற்றனர். தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
நெய்வேலி நகரத்தில் 8 ரோடு சந்திப்பு, அம்பேத்கர் சதுக்கம், மெயின் பஜார், பெரியார் சதுக்கம், இந்திரா நகர் மாற்று குடியிருப்பு, கீழ் வடக்கு மேல் வடக்குத்து ஆகிய 8 க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க., கொடியேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து வைத்தி, சக்கரவர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,   நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க குமாரசாமி, செல்வராஜ், ஆறுமுகம்,  முருகவேல், சேகர், கிருஷ்ணராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகுரு, விஷ்ணு,  ஒன்றிய, நகர செயலாளர்கள் சக்திவேல், செல்வகுமார், எழில்செல்வன், பிரகாஷ், மூர்த்தி, சார்லஸ், சண்முகம், ஒன்றிய, நகர தலைவர்கள் அருணகிரி, தேவநாதன், தமிழ், தட்சிணாமூர்த்தி, அண்ணாதுரை, சத்யராஜ், சூரிய நாராயணன், மகளிரணி சுஜாதா, சிவகாமி, சுமதி, சுசிலா, ஆனந்தி, உமா மகேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெய்வேலி தொகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

