/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 'போக்சோ'
/
சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 'போக்சோ'
ADDED : ஆக 06, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த எட்டு வயது சிறுமியை எதிர்வீட்டில் உள்ள ராஜாதுரை, 67; முதியவர் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம கூறியதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி ஆகியோர் வழக்கு பதிந்து, முதியவர் ராஜாதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.