ADDED : மார் 10, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15 ம் ஆண்டு மழலையர் தினவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ரவி, பள்ளி இயக்குனர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன் போட்டியில் பங்கேற்ற மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். ரத்னா பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகளான டாக்டர்கள் அகல்யா, கீர்த்தனா, மற்றும் கராத்தே மற்றும் சிலம் தலைமை பயிற்சியாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்த கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பள்ளி மழலையர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.