/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரத்தனா பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 தேர்வில் சாதனை
/
ரத்தனா பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2024 11:24 PM

பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 தேர்வில் பள்ளி அளவில் மாணவர் சாருகேஷ் 564 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவி கீர்த்தனா 557 பெற்று இரண்டாமிடம், மாணவி நிலோபர் 547 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
மாணவி சுவேதா 546 மதிப்பெண்களும், மாணவி காஞ்சனா 535 மதிப்பெண்களும் பெற்றனர். 13 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன், தாளாளர் ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ரவி, இயக்குநர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.