ADDED : மே 18, 2026 07:21 PM

அ நிறம் | அளவு
டி.சி. படம்...: சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர் தியாகராஜன், தலைமை காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, விழுப்புரத்திலிருந்து திருவாரூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அப்போது, 150 கிலோ எடையுள்ள 6 மூட்டை ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அரிசியை யாரும் உரிமை கோரவில்லை. 6 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸ் பறிமுதல் செய்து, கடலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு புரிவினரிடம் ஒப்படைத்தனர்.
