/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை பணியாளர்கள் ஜூன் 3ல் வேலை நிறுத்தம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் ஜூன் 3ல் வேலை நிறுத்தம்
ADDED : மே 30, 2024 05:37 AM
கடலுார்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 3ம் தேதி ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க இணை செயலாளர் சேகர் அறிக்கை;
ரேஷன் கடை விற்பனையாளர்கள், நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு நேரில் சென்று பொருட்களை வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். எடை குறைவாக பொருட்கள் அனுப்புவதை நிறுத்த வேண்டும்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் இறக்கும்போது ஏதாவது ஒரு அதிகாரி உடனிருந்து எடை அளவை சரிபார்க்க வேண்டும். பெண் ஊழியர்கள் பணிபுரியும் கடைகளில் பல இடங்களில் கழிவறை வசதி இல்லை.
அந்த இடங்களில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறை அமைத்து தர வேண்டும். பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் பழுதாகும்போது, விற்பனையாளர்கள் தங்கள் சொந்த பணத்தில் சரிசெய்யும் நிலையை தடுக்க வேண்டும்.
இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் ஜூலை 8ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.