UPDATED : அக் 10, 2026 04:18 PM
ADDED : அக் 10, 2026 04:16 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வி.சி., சார்பில் பஞ்சமி நில போராளிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
நகர செயலாளர் தன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் அகிலன், சரவணன், பாஸ்கர், கண்ணன், அய்யாதுரை, அறிவு, முத்து, துரைமுருகன் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலாளர் குமரேசன் வரவேற்றார்.
அதில், முன்னாள் மண்டல துணைச் செயலாளர் ஐயாயிரம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிரிழந்த ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரது படங்களுக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகளிரணி தமிழரசி நன்றி கூறினார்.
