தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி


ADDED : ஜூன் 06, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான புத்தாக்க பயிற்சி, கடலுார் அரசு மருத்துவமனையில் நடந்தது.

பயிற்சியில் அவசரகால மருத்துவ நிபுணர்களுக்கு, மருத்துவ முறைகள் குறித்து மேம்படுத்தப்பட்ட நெறிமுறைகள் மற்றும் பயிற்சிகள், முதலுதவி பயிற்சி உள்ளிட்டவை ஈ.எம்.எல்.சி.,பயிற்றுனர்களால் வழங்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வாகன பராமரிப்பு, பாதுகாப்பாக வாகனம் இயக்குதல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள், ரீஜனல் பிளீட் இன்ஜினியர்கள் மூலம் வழங்கப்பட்டது.

கடலுார் மாவட்டத்திற்கு கடலுார் அரசு மருத்துவமனையிலும், கள்ளக்குறிச்சி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தியாகதுருகத்திலும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை ஈ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸால் வழங்கப்பட்டது.

பயிற்சியில் கடலுார், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைலட்கள் 110 பேரும், அவசரகால மருத்துவ நிபுணர்கள் 74 பேரும் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us