/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில்'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு ஊர்வலம்
/
கடலுாரில்'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு ஊர்வலம்
கடலுாரில்'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு ஊர்வலம்
கடலுாரில்'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூலை 04, 2024 12:39 AM

கடலுார் : கடலுார் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தை முன்னிட்டு 'மீண்டும் மஞ்சப்பை' எனும் விழிப்புணர்வு ஊர்வலம் கடலுாரில் நேற்று நடந்தது.
டவுன்ஹால் அருகே துவங்கிய ஊர்வலத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் பாரதி ரோடு, அண்ணா பாலம் ஜவான்பவன் கட்டடம் அருகில் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட விழிப்புணர்வு அட்டைகளை கையில் ஏந்தியவாறும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
நிகழ்ச்சியில் கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பாதிரிபுலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 500 பேர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தின் நிறைவில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று, மஞ்சப்பை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட பொறியாளர் கஜலட்சுமி, மாவட்ட வன அலுவலர் குருசாமி மற்றும் அரசு அலுவலர்கள், பங்கேற்றனர்.