ADDED : நவ 05, 2024 06:29 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் ஒருங்கிணைந்த கல்வி வட்டார வள மையம் திறப்பு விழா நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவில் உள்ள ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, கொழை, மழவராயநல்லுார், பாளையங்கோட்டை, கானுார், சி.கீரனுார் ஆகிய 7 குறுவள மையங்கள் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த கல்வி வட்டார வள மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டார வள மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் மன்னர் மன்னன், இந்திரா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் பரமசிவம் வரவேற்றார்.
விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் (இடை நிலை) துரைபாண்டியன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிங்காரவேல் ஆகியோர் அலுவலகத்தை திறந்து குத்துவிளக்கேற்றனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், ராமதாஸ், மணிவாசகம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.