/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு

ADDED : ஆக 03, 2024 04:25 AM

திட்டக்குடி : திட்டக்குடியில் இறந்துபோன இளம்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி நந்தினி,27; இவர் நேற்றுமுன்தினம் கூடலுாரிலுள்ள வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் நந்தினியின் கணவர் சக்திவேல் மற்றும் நந்தினியின் பெற்றோர் தரப்பினர் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
அப்போது நந்தினியின் உறவினர்களுக்கும், சக்திவேலுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திட்டக்குடி போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு, எச்சரித்து அனுப்பினர். அரசு மருத்துவமனை வளாகத்தில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.