/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
/
வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : ஜூலை 25, 2024 06:06 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, அருண்மொழிதேவன் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.
சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோட்டை சேர்ந்த வர்அமராவதி என்பவரின் வீடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்து பொருட்கள் சேதமானது.
தகவலறிந்த புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் நேரில் சென்று ஆறுதல் கூறி அரிசி,பணம் வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பன், நல்லுார் முத்து, நகரசெயலாளர் மணிகண்டன், முன்னாள் நகரசெயலாளர் நன்மாறன், சர்புதின், ஸ்ரீதர், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் கார்த்திகேயன், முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.