/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்தால் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்
/
தீ விபத்தால் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : மே 10, 2024 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.
பரங்கிப்பேட்டை அடுத்த வயலாமூரில் அன்னபூரணி என்பவது கூரை வீடு சமீபத்தில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார்.
ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் மகேஷ், ஒன்றிய கவுன்சிலர் சுதந்திரதாஸ், கிளை கழக செயலாளர்கள் சரவணன், வேல்முருகன் உடனிருந்தனர்.