/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்கம்ப விளம்பர பேனர்கள் அகற்றம்
/
மின்கம்ப விளம்பர பேனர்கள் அகற்றம்
ADDED : மார் 10, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு பகுதியில் மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்களை மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர்.
நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம்,பாலுார் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் விளம்பர பேனர்கள் அதிகளவு கட்டப்பட்டிருந்தது. மின்வாரிய ஊழியர்கள் மின்தடையான நேரத்தில் மின்கம்பத்தில் ஏற முடியாத நிலை இருந்தது.
இதனால் மின்வாரிய உயரதிகாரிகளின் உத்திரவின்படி மின்வாரியஊழியர்கள் மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அகற்றினர்.