/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை அமைக்க இடையூறு ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
/
சாலை அமைக்க இடையூறு ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
ADDED : ஜூன் 09, 2024 03:37 AM
புவனகிரி, : பவனகிரி அருகே கிராமத்தில் சாலை அமைக்க இடையூறாக இருந்த வீடுகள் போலீஸ் பாதுகப்புடன் அகற்றப்பட்டது.
மேல்புவனகிரி ஒன்றியம், கீழமூங்கிலடி ஊராட்சி சின்ன தெருவில் சிமென்ட் சாலை அமைக்க அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது.
பணிகள் துவங்க உள்ள இடத்தில், அப்பகுதியை சேர்ந்த தனி நபர்கள் ஆக்கிரமித்து குடிசை போட்டு வைத்திருந்தார். இதனால் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. வருவாய் துறையினர் முன்னிலையில், இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு செய்தவருக்கு நோட்டீஸ் வழங்கியும் அகற்றவில்லை.
இந்நிலையில் நேற்று சிதம்பரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், சக்திவேல் மற்றும் போலீசார் பாதுகாப்புடன், வி.ஏ.ஓ., கோபிநாத் மற்றும் அப்பகுதி மக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றபபட்டு, சாலை அமைக்கும் பணி துவங்கியது. ஊராட்சி தலைவர் சுடர்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.