/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஆக 29, 2024 07:46 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரை சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.
விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, தனிநபர் ஒருவர் கோர்டில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில், பொதுவழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கோர்ட் உத்தரவிட்டது.
அதன்பேரில், நேற்று விருத்தாசலம் நகராட்சி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம்,சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க விருத்தாசலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.