ADDED : ஜூலை 03, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
கிள்ளை, குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவிலில், கடந்த ஜூன், 29 ம் தேதி நடந்த திருவிழாவின் போது, பட்டாசு வெடித்த விபத்தில், 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, அரசு நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும் என கிள்ளை பேரூராட்சி துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் மற்றும் அப்பகுதி கிராம முக்கியஸ்தர்கள், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
