/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
/
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
ADDED : மே 07, 2024 11:23 PM
கடலுார் : தமிழகத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய போக்குவரத்து துறை பணியாளர் சம்மேளனம் தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.
கடலுாரில் அவர் கூறியதாவது; தமிழகத்தில் அதிக வாகன விபத்துக்கள் நடக்கிறது. டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதில் ஏற்படும் தவறுகளால் தான் விபத்துக்கள் நடப்பதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அங்கீகாரம் அளிக்கப்பட்ட பயிற்சி மையங்கள் அமைக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசு இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆட்டோமேட்டிக் டெஸ்டிங் ஸ்டேஷன் மூலம் ஆய்வு செய்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க வேண்டும். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் சாலை பாதுகாப்பு என தனித்துறை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.