ADDED : ஏப் 26, 2024 05:32 AM
புவனகிரி: அம்பாபுரம் ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஊராட்சி மக்கள் சார்பில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாள்புரம் ஊராட்சியில் ஊராட்சிக்குட்பட்ட, பொது இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர் தனித்தனியாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டங்களான உறிஞ்சுக்குழி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை தடுத்து நிறுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள தனிநபர்களுக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவில்லை.
இது குறித்து ஊராட்சி தலைவர் விசுவேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாலுகா நில அளவை பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளிடம், ஊராட்சிக்குட்பட்ட இடங்களை முறைப்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட மனு அளித்துார்.
விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்மந்தப்பட்ட அலுவலகத்தை பொதுமக்களுடன் சேர்ந்து முற்றுகைப் போராாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

