/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் குழாய் சீரமைக்க கோரிக்கை
/
குடிநீர் குழாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 05:22 AM
கடலூர், : சிலம்பிமங்களத்தில் சீரமைக்கப்படாமல் உள்ள குடிநீர் குழாய் சீரமைக்க பொதுமக்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.
சிதம்பரம் அடுத்த சிலம்பிமங்களத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி உள்ள மெயின்ரோட்டு தெரு, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 70 குடும்பங்கள்வசித்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் - நாகை நான்குவழி சாலை விரிவாக்கத்தின்போது,இப்பகுதியில் குடிநீருக்காக சென்ற பைப்லைன் உடைந்து சேதமடைந்தது.
சுமார் ஓராண்டாகியும் இதுவரை உடைந்த பைப்லைன் சீரமைக்கப்படவில்லை. இதனால் மெயின்ரோட்டுதெரு, வசந்தம் நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்றுதண்ணீர் பிடித்துவரும் நிலை உள்ளது. மேலும் பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகம் இருப்பதால், விபத்தை தவிர்க்க இப்பகுதி பெண்கள் இரவு நேரங்களில் தண்ணீர் பிடித்து,தலையில் சுமந்துசெல்லும் நிலை உள்ளது.
எனவே, உடைந்துள்ள குடிநீர் குழாயை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.