ADDED : ஜூன் 02, 2026 04:41 PM
பெண்ணாடம், ஜூன் 3–
புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் – திட்டக்குடி நெடுஞ்சாலையில், பெண்ணாடம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் பகுதியில் வேளாண்மை விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு வரும் பொதுமக்கள் விருத்தாசலம் – திட்டக்குடி சாலையை, கடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால், இவ்வழியே செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் சாலையை கடக்க முயலும் பொது மக்கள் வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைவதுடன், உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
