/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த கோரிக்கை
/
கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த கோரிக்கை
ADDED : மே 19, 2024 03:36 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள், தாழ்வான பகுதிகள் மற்றும் வடிகால் பகுதிகளில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவீரப்படுத்த வேண்டும்.
மேலும் திறந்த வெளி பகுதிகள் மற்றும் சாலையோரம் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகாமல் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

