/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலவச மனைப்பட்டா வழங்க அமைச்சரிடம் கோரிக்கை
/
இலவச மனைப்பட்டா வழங்க அமைச்சரிடம் கோரிக்கை
ADDED : ஆக 04, 2024 11:56 PM

வேப்பூர்: என்.நாரையூர் கிராம பெண்கள் இலவச மனைப்பட்டா கோரி, அமைச்சர் கணேசனிடம் மனு கொடுத்தனர்.
மங்களூர் ஒன்றியத்தில் திட்டப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் கணேசன் வேப்பூர் வந்தபோது, என்.நாரையூர் கிராம பெண்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கோரி மனு கொடுத்தனர்.
அப்போது, நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகிறோம். மனைப்பட்டா கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, மனைப்பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அவர்களிடம், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, துணை செயலாளர் மாரிமுத்தாள் குணா, இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, மாரிமுத்து, காங்., முருகானந்தம் உடனிருந்தனர்.